நியூசிலாந்து வீரர்களுக்கு பேரதிர்ச்சி!! இனி ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரே சம்பளம்தான்;

கிரிக்கெட் விளையாட்டு உலகில் எந்த ஒரு எதிர்ப்பாளர்களும் இல்லாமல் காணப்படுகிற நாடு என்றால் அதனை நியூசிலாந்து அணி என்று கூறலாம். ஏனென்றால் நியூசிலாந்து அணிக்கு யாரும் haters கிடையாது.

அந்த அளவிற்கு அந்த அணி காணப்படுகிறது. அதிலும் நம் இந்தியாவில் உள்ள பலரும் நியூசிலாந்து அணி மீது அதிக விருப்பமுள்ளவர்களாக காணப்படுகின்றனர். பலமுறை இந்தியாவை பைனல் போட்டிக்கு நுழையவிடாமல் தடுத்திருந்தாலும் நியூசிலாந்தின் மீது அனைவருக்கும் ஈர்ப்பு உள்ளது.

இந்த நிலையில் நியூசிலாந்து அணி கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு சம்பளம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதன்படி அவர்களுக்கு இனி ஒரே சம்பளம் என்று அறிவிக்கப்பட்டது.

நியூசிலாந்தில் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஒரே சம்பளம் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. NZC, 6 முக்கிய கிரிகெட் சங்கங்கள் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சங்கம் இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த புதிய ஒப்பந்தத்தின்படி நியூசிலாந்தில் அனைத்து கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கும் 5 ஆண்டுகளுக்கு ஒரே சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.