கைக்குழந்தையுடன் நியூஸ் வாசிப்பாளர்.. வைரலாகும் வீடியோ..

அமெரிக்காவில் வீட்டில் இருந்து பணிபுரியும் பெண் வானிலை ஆராய்ச்சியாளர் தனது கைகுழந்தையுடன் தொலைக்காட்சி நேரலையில் தோன்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் மிஸ்வாங்சிங் மாகாணம் மில் வாக்கிங் நகரை சேர்ந்தவர் ரெபேக்கா ஷூட். இவர் வானிலை ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் சிபிஎஸ் 58 நியூஸ் என்ற தொலைக்காட்சியில் வேலை செய்து வருகிறார் இந்த நிலையில் நேற்றிரவு வானிலை அறிக்கையை வாசிக்க அவர் ஆயித்தமாகி கொண்டிருந்தார்.

அப்போது திடீரென தனது 3 மாத குழந்தை அழுவதை கண்டு அவர் குழந்தையை தூக்கிக்கொண்டு செய்தி வாசித்தது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment