ஜூம் செயலி ஸ்டாலினுக்கு ராயல்டி கொடுக்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் 

ஜூம் செயலியை கண்டுபிடித்தவர்கள் திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு ராயல்டி கொடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் மகனும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

 

ஜூம் செயலியை கண்டுபிடித்தவர்கள் திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு ராயல்டி கொடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் மகனும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இன்று காலை 10 மணி அளவில் திமுக பொதுக்குழு கூட்டம் காணொளியில் ஜூம் செயலி மூலம் கூடியது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட திமுக நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் ஜூம் செயலி மூலம் இணைந்தனர் என்பதும் அதன் பின்னர் காணொளி மூலமே அனைத்து தீர்மானங்களும் இயற்றப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதல் முறையாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசினார். தனக்கு பேச வாய்ப்பளித்த அன்பு மாமா துரைமுருகன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், புதிய பொதுச் செயலாளராகவும் புதிய பொருளாளராகவும் பதவி ஏற்றுள்ள துரைமுருகன் மற்றும் டிஆர் பாலு அவர்களை வாழ்த்த எனக்கு வயதில்லை என்றும் கூறியுள்ளார் 

மேலும் ஜூம் செயலியை கண்டுபிடித்தவர்கள் முக ஸ்டாலினுக்கு ராயல்டி கொடுக்க வேண்டும் என்று கூறினார் ஏனெனில் பொதுக்குழு கூட்டத்திஅயே அவர் ஜூம் செயலியில் நடத்தியுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web