தவறான தகவல்களைத் தந்த ஒன்றரை கோடி வீடியோக்கள் நீக்கம்: யூடியூப் அதிரடி

யூடியூபில் ஒரு கணக்கு ஆரம்பித்து விட்டால் இஷ்டம் போல் வீடியோக்களை அப்லோடு செய்யும் வழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. குறிப்பாக தனி மனித தாக்குதல்கள் பெருகி வருவதாக கூறப்படுகிறது. மேலும் பார்வையாளர்களை அதிகம் பெற வேண்டும், அதிலிருந்து வருமானம் அதிகம் பெற வேண்டும் என்பதற்காக தவறான தகவல்களையும் வதந்திகளையும் யூடியூபில் பரப்பும் வழக்கம் ஒரு சிலரிடம் அதிகரித்து வருகிறதுஇந்த நிலையில் வன்முறை மற்றும் தவறான தகவல் கொடுத்ததாக கடந்த மூன்று மாதங்களில் ஒன்றரை கோடி வீடியோக்களை நீக்கி
 

தவறான தகவல்களைத் தந்த ஒன்றரை கோடி வீடியோக்கள் நீக்கம்: யூடியூப் அதிரடி

யூடியூபில் ஒரு கணக்கு ஆரம்பித்து விட்டால் இஷ்டம் போல் வீடியோக்களை அப்லோடு செய்யும் வழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. குறிப்பாக தனி மனித தாக்குதல்கள் பெருகி வருவதாக கூறப்படுகிறது. மேலும் பார்வையாளர்களை அதிகம் பெற வேண்டும், அதிலிருந்து வருமானம் அதிகம் பெற வேண்டும் என்பதற்காக தவறான தகவல்களையும் வதந்திகளையும் யூடியூபில் பரப்பும் வழக்கம் ஒரு சிலரிடம் அதிகரித்து வருகிறது
இந்த நிலையில் வன்முறை மற்றும் தவறான தகவல் கொடுத்ததாக கடந்த மூன்று மாதங்களில் ஒன்றரை கோடி வீடியோக்களை நீக்கி இருப்பதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் 50 லட்சம் வீடியோக்கள் மட்டுமே நீக்கப்பட்டு இருந்த நிலையில் எப்போதும் இல்லாத வகையில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில் ஒன்றரை கோடி வீடியோக்களை யூடியூப் நீக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த தகவல்கள், பாலியல் சித்தரிப்புகள், மோசடிகள் மற்றும் தவறான தகவல்களை பரப்புதல், தனிமனித தாக்குதலை ஏற்படுத்துதல், மனிதர்கள் மற்றும் விலங்குகள் துன்புறுத்தும் வகையான வீடியோக்கள், தீவிர வாதம் அல்லது வெறுப்புகளை ஊக்குவிக்கும் வீடியோக்கள் ஆகிய வீடியோக்கள் நீக்கப்பட்டதாக யூடியூப் தெரிவித்துள்ளது

மேலும் யூடியூப்பில் கிட்டத்தட்ட சென்சார் போன்ற அனைத்து வீடியோக்களும் கண்காணிக்கப்படும் என்றும் தவறான மற்றும் மோசமான, தனிமனித தாக்குதல்களை உடைய வீடியோக்கள் நீக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே யூடியூப்பில் வீடியோக்களை பதிவேற்றம் நபர்கள் இனி கவனத்தோடு இருக்க வேண்டும் என அறிவுறுத்தபடுகிறது

From around the web