நீ அவ்வளவு அழகாக இல்லையே, உன்னை யார் ரேப் பண்ணியிருப்பாங்க: போலீஸ் அதிகாரியின் அதிர்ச்சி பதில்

பாலியல் புகார் கொடுக்க வந்த 16 வயது சிறுமியிடம் நீ அவ்வளவு அழகாக இல்லையே உன்னை யார் பலாத்காரம் செய்து இருப்பார்கள் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி தனது பாட்டியுடன் வாழ்ந்து வந்த நிலையில் உள்ளூர் ரவுடிகள் சிலர் அச்சிறுமியின் வீட்டிற்குள் புகுந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்

இதுகுறித்து அந்த சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது அந்த சிறுமியின் புகாரை பார்த்த காவல்துறை அதிகாரியின் நீ வன்கொடுமை செய்யும் அளவுக்கு அவ்வளவு அழகாக இல்லையே என்று கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

இது குறித்து செய்திகள் சமூக ஊடகங்களிலும் உள்ளூர் ஊடகங்களிலும் பரவிய நிலையில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி குறித்து விசாரணை செய்ய காவல்துறை தலைமை உத்தரவிட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

From around the web