செல்ஃபி மோகத்தால் உயிரிழந்த இளம்பெண்

செல்ஃபி மோகம் இளைஞர்களுக்கிடையே அதிகரித்துள்ளது. செல்ஃபி எடுக்க முயற்சி செய்து உயிரைவிட்ட இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள சுற்றுலா தளங்களில் ஒன்றான டைமண்ட் வளைகுடாவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளில் ஒருவரான 27 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் பாறைகள் அதிகமுள்ள இடத்தில் செல்ஃபி எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது பலத்த காற்று வீசியதால் அதில் கால் தடுமாறி அந்த இளம்பெண் பாறைகளில்
 
செல்ஃபி மோகத்தால் உயிரிழந்த இளம்பெண்

செல்ஃபி மோகம் இளைஞர்களுக்கிடையே அதிகரித்துள்ளது. செல்ஃபி எடுக்க முயற்சி செய்து உயிரைவிட்ட இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் உள்ள சுற்றுலா தளங்களில் ஒன்றான டைமண்ட் வளைகுடாவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளில் ஒருவரான 27 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் பாறைகள் அதிகமுள்ள இடத்தில் செல்ஃபி எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது பலத்த காற்று வீசியதால் அதில் கால் தடுமாறி அந்த இளம்பெண் பாறைகளில் மோதி கீழே விழுந்தார்.

செல்ஃபி மோகத்தால் உயிரிழந்த இளம்பெண்

பின்னர் அந்த இளம்பெண் ஹெலிகாப்டர் மூலம் மீட்டெடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பலத்த காயங்கள் ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இளம்பெண் கால் இடரி விழுந்த இடத்தில் அடுத்த நொடியே இளைஞர்கள் சிறிதும் அச்சமின்றி செல்ஃபி எடுக்க தொடங்கியது அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

செல்ஃபி மோகம் இளைஞர்களிடையே காட்டுத்தீ போல பரவிவருகிறது. மிகவும் ஆபத்தான இடங்களில் போட்டி போட்டுக்கொண்டு இளைஞர்கள் செல்ஃபி எடுக்க முயற்சி செய்து உயிர்விடுவது வருத்தத்தை அளிக்கிறது.

From around the web