வேலைவாய்ப்பிற்காக பட்ஜெட்டை எதிர்நோக்கி இளைஞர்கள்

2019-20 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை ஜூலை 5 ஆம் தேதி புதிதாக பதவியேற்றுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். பிப்ரவரி மாதம் தேர்தலுக்கு முன்னதாக 2019- 2020 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் அறிவிக்கப்பட்டது. அதில் மக்களின் வரவேற்பைப் பெற்ற ஒன்றாகவே இருந்ததில் சந்தேகமில்லை. அதில், பிரதமரின் கிசான் யோஜனா திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு ஓர் ஆண்டுக்கு ரூ.6000 கொடுக்கப்படும் என்ற திட்டம் ஏழை எளிய மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதேபோல்,
 

2019-20 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை ஜூலை 5 ஆம் தேதி புதிதாக பதவியேற்றுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். 

பிப்ரவரி மாதம் தேர்தலுக்கு முன்னதாக 2019- 2020 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் அறிவிக்கப்பட்டது. அதில் மக்களின் வரவேற்பைப் பெற்ற ஒன்றாகவே இருந்ததில் சந்தேகமில்லை.

அதில், பிரதமரின் கிசான் யோஜனா திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு ஓர் ஆண்டுக்கு ரூ.6000 கொடுக்கப்படும் என்ற திட்டம் ஏழை எளிய மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதேபோல், கட்டிட வேலை, கை வேலை எனப் பலதரப்பட்ட வேலைகள் செய்யும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.3000 வழங்கப்படும் என்ற திட்டமும் எளியோருக்கு கை கொடுக்கும் என்று எண்ணும் வகையில் இருந்தது.

வேலைவாய்ப்பிற்காக பட்ஜெட்டை எதிர்நோக்கி இளைஞர்கள்

அதேபோல், வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது என்ற திட்டமும் நடுத்தர குடும்பத்தின் நிலையை முன்னேற்ற வேண்டும் என்பதை மையமாக்க் கொண்டதாக இருந்தது.

ஆனால் அவற்றில் சில முக்கிய திட்டங்கள் பற்றி பேசப்படாதது பின்னடைவாக கருதப்பட்டது. அதில், முதலாவதாக சொல்லப்படுவது வேலையின்மை; வேலையில்லாதோர் எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத அளவு அதிகமாகியுள்ளது, போதுமான அளவுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கான திட்டங்கள் இடம்பெற வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரண்டாவதாக சொல்ல வேண்டுமானால், விவசாயிகள் பிரச்னை;
வங்கிக்கடன் தள்ளுபடி மட்டுமே ஒரு சிறந்த தீர்வாக இருக்கும், மாதம் வழங்கும் 500 ரூபாய் கொண்டு அன்றாட வாழ்வினை வாழ்வது கூட கஷ்டமே என்றதுடன்,  விவசாயம் சம்பந்தமான தண்ணீர் தட்டுப்பாடு, விவசாயத்தை நிறுவனங்களுடன் இணைத்து, வறுமையை ஒழித்தல், விவசாயிகளின் குடும்பத்திற்கு இன்ன பிற சலுகைகள் வழங்குதல் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

 உற்பத்தித்துறையை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தி புதிய தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது கருத்துக் கணிப்பு. 

வேலைவாய்ப்பின்மையை இந்த பட்ஜெட்டில் ஒழிக்க நடவடிக்கை எடுக்காவிடில், இந்தியா பொருளாதார ரீதியாக பின்னடைவையே சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை.

From around the web