நிவாரணத்துக்கு கொடுக்கிற அந்த 2000 ரூபாயை கொள்ளை அடிக்கிறீர்களே!!!

நிவாரணம் கொடுப்பதற்காக வைத்திருந்த 7.36 லட்சம் ரூபாய் கடந்த 17ஆம் தேதி காணாமல் போனது தற்போது கண்டறியப்பட்டுள்ளது!
 
2000

தற்போது நம் தமிழகத்தில் கொரோனா காலகட்டம் என்றே கூறலாம். ஆனால் பல பகுதிகளில் கொரோனா  பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. இதனை அறிந்து கொண்ட நம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எத்தகைய குழப்பமும் இன்றி தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தினார். இதனால் தமிழகத்தில் பல பகுதிகளில் இந்த கொரோனா  நோயின் பரவல் குறைவாக காணப்படுகிறது. மேலும் பல பகுதிகளில் கொரோனா  நோயின் தாக்கம் குறைகிறது .மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ரேஷன் கார்டுகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.2000

மேலும் ரேஷன் கடைகளில் இந்த மாதம் நிவாரண தொகையாக 2000 அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.  இத்தகைய நிவாரண நிதியில் அவ்வப்போது கொள்ளை நடப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் கொள்ளையடிக்கப்பட்ட பணமும் தற்போது மீட்கப்பட்டதாக காணப்படுகிறது. இச்சம்பவம் தலைநகரான சென்னையில் நடைபெற்றுள்ளது. அதன்படி சென்னை சைதாப்பேட்டை காவேரி நகர் ரேஷன் கடையில் காணாமல்போன 4.45 லட்சம் மதிப்பிலான ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா  நிவாரணம் கொடுப்பதற்காக வைத்திருந்த 7.36 லட்சம் பணம் கடந்த 17ஆம் தேதி காணாமல் போனது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது  தொடர்பாக காஞ்சியைச் சேர்ந்த கோபியை கைது செய்து போலீசார் அவரிடம் இருந்து இந்த 4.45 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர் .மேலும் மீதமுள்ள பணம் பற்றியும் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

From around the web