நேற்று மாலை 5 மணிக்கே மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்: காரணம் என்ன தெரியுமா?

இன்று முதல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதையொட்டி 4 மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்றைக்கு இரண்டு மடங்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் மீண்டும் முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளதை அடுத்து வரும் 12 நாட்களுக்கு மது கிடைக்காது என்பதால் மதுபிரியர்கள் ஸ்டாக் வாங்கி வைக்க முண்டியடித்தனர். இதனால் சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில்
 
நேற்று மாலை 5 மணிக்கே மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்: காரணம் என்ன தெரியுமா?

இன்று முதல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதையொட்டி 4 மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்றைக்கு இரண்டு மடங்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் மீண்டும் முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளதை அடுத்து வரும் 12 நாட்களுக்கு மது கிடைக்காது என்பதால் மதுபிரியர்கள் ஸ்டாக் வாங்கி வைக்க முண்டியடித்தனர்.

இதனால் சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று காலை முதல் வழக்கத்தைக் காட்டிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று இரண்டு மடங்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 300 கடைகளில் கடந்த வார விற்பனை 18 கோடியாக இருந்த நிலையில் நேற்றைய விற்பனை மட்டும் 36 கோடியாக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்னும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நேற்று மேற்கண்ட மூன்று மாவட்டங்களில் உள்ள ஒருசில கடைகளில் மாலையே சரக்குகள் அனைத்தும் விற்கப்பட்டதால் கடைகள் 5 மணியுடன் மூடப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

From around the web