தமிழகத்திற்கு மஞ்சள் நிற அலர்ட்: கனமழை பெய்யுமா?

 

தமிழகத்தில் ஏற்கனவே வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுத்திருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வலுப்பெற்றுள்ளதாகவும் இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கனமழை காரணமாக தமிழகத்தில் மஞ்சள் அலர்ட்விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இந்த நிலையில் இன்று காலை முதல் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதும் இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து வாகனங்கள் கடும் சிரமத்திற்கு இடையே சென்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web