யாரும் வராதீங்க! கலெக்டர் அறிவிப்பு- திருவண்ணாமலையில் கிரிவலம் ரத்து

திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுகிறது. கோயிலில் இறைவனை வலம் வருதலைப் போல மலையை வலம் வருவது இங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. பௌர்ணமி தினங்களில் சித்தர்கள் அரூபமாய் இங்கு கிரிவலம் வருவதாய் நம்பப்படுவதால் சாமானிய மக்களும், சிவ பக்தர்களும் கிரிவலம் வரும் வழக்கம் பல்லாண்டு காலமாய் இங்கு நடைமுறையில் உள்ளது. சித்ரா பௌர்ணமியன்று கிரிவலம் வந்தால், அந்த வருடத்தின் 12 பௌர்ணமி தினங்களிலும் கிரிவலம் வந்த பலன் கிடைக்குமென்ற நம்பிக்கையில் வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். இதற்காக
 

திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுகிறது. கோயிலில் இறைவனை வலம் வருதலைப் போல மலையை வலம் வருவது இங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. பௌர்ணமி தினங்களில் சித்தர்கள் அரூபமாய் இங்கு கிரிவலம் வருவதாய் நம்பப்படுவதால் சாமானிய மக்களும், சிவ பக்தர்களும் கிரிவலம் வரும் வழக்கம் பல்லாண்டு காலமாய் இங்கு நடைமுறையில் உள்ளது.

யாரும் வராதீங்க! கலெக்டர் அறிவிப்பு- திருவண்ணாமலையில் கிரிவலம் ரத்து

சித்ரா பௌர்ணமியன்று கிரிவலம் வந்தால், அந்த வருடத்தின் 12 பௌர்ணமி தினங்களிலும் கிரிவலம் வந்த பலன் கிடைக்குமென்ற நம்பிக்கையில் வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். இதற்காக தமிழகம், இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் வருகை தருவர்.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு சட்டம் பொதுமுடக்கம் மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, சித்ரா பௌர்ணமி (மே 6) நாளில் வெளியூர்களில் இருந்து கிரிவலத்துக்காக யாரும் திருவண்ணாமலைக்கு வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கேட்டுக் கொண்டுள்ளார். இதேபோன்று, உள்ளூர் மக்களும் அன்றைய தினம் கிரிவலம் செல்லக்கூடாது எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மீறுவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால், பிரதோசம் மற்றும் சித்ரா பௌர்ணமி அன்று நடக்கும் ஆன்மீக நிகழ்வுகள் அனைத்தும் குறைந்த எண்ணிக்கையிலான சிவாச்சாரியர்கள், ஊழியர்களை தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் செய்விக்கப்படும். பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

From around the web