யாஹூ இனி இந்தியாவில் இல்லை: அதிரடி அறிவிப்பு!

 
yahoo

மத்திய அரசின் புதிய சமூக வலைதள கொள்கை தங்கள் நிறுவனத்திற்கு ஒத்து வரவில்லை என்றும் அதனால் இந்தியாவில் இருந்து வெளியேறுகிறோம் என்றும் யாஹூ நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் யாஹூ பயனாளிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபத்தில் மத்திய அரசு புதிய சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளது. இந்த கொள்கை காரணமாக கூகுள், ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவை தங்களது அதிருப்தியை தெரிவித்து இருந்தன. இருப்பினும் வேறு வழியின்றி இந்த கொள்கையை ஏற்று கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மத்திய அரசின் புதிய கொள்கை தங்கள் நிறுவனத்தை கட்டுப்படுத்துவதாகவும் அதனால் இந்தியாவில் இருந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் யாஹூ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் யாஹூ நிறுவனத்தின் செய்திகள், கிரிகெட், பொழுதுபோக்கு, பைனான்ஸ் ஆகிய சேவைகள் நிறுத்தப்படுவதாக யாஹூ நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் யாஹூ மெயில் தொடர்ந்து இயங்கும் என்றும் மத்திய அரசின் புதிய கொள்கை யாஹூ மெயிலை கட்டுப்படுத்தாது என்றும் அதனால் மெயில் பயனாளிகள் மட்டும் கவலைப்படத் தேவையில்லை என்றும் யாவும் விளக்கமளித்துள்ளது.

From around the web