100 நாட்களாக ஊரடங்கு இல்லை: வூகானில் இயல்பு நிலை திரும்பியது:

கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு சீனாவின் வூகான் என்ற மாகாணத்தில் தான் முதன் முதலில் தோன்றியது. அதன் பின் வூகான் மாகாணம் முழுவதையும் தாக்கி ஏராளமானவர்கள் பலியாகி கொண்ட நிலையில், சீனா முழுவதிலும் பரவியது அதுமட்டுமின்றி சீனாவில் இருந்து வெளிநாடு சென்றவர்கள் மூலம் உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் தற்போது பரவி இருக்கிறது என்பதும் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி மக்கள் கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் கொரோனா வைரஸ்
 
100 நாட்களாக ஊரடங்கு இல்லை: வூகானில் இயல்பு நிலை திரும்பியது:

கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு சீனாவின் வூகான் என்ற மாகாணத்தில் தான் முதன் முதலில் தோன்றியது. அதன் பின் வூகான் மாகாணம் முழுவதையும் தாக்கி ஏராளமானவர்கள் பலியாகி கொண்ட நிலையில், சீனா முழுவதிலும் பரவியது

அதுமட்டுமின்றி சீனாவில் இருந்து வெளிநாடு சென்றவர்கள் மூலம் உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் தற்போது பரவி இருக்கிறது என்பதும் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி மக்கள் கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பிறப்பிடம் என்று கூறப்படும் வூகான் என்றாலும், தற்போது அங்கு முழு அளவில் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. கடந்த 100 நாட்களாக வூகான் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு இல்லை என்றும் அங்கு பள்ளிகள் கடைகள் வணிக வளாகங்கள் உணவகங்கள் உடற்பயிற்சிக் கூடங்கள் என அனைத்தும் திறக்கப்பட்டு விட்டன என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது

மேலும் வீதிகளிலும் சாலைகளிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று கொண்டிருக்கின்றனர் என்பதும் இருப்பினும் அனைவரும் பாதுகாப்பிற்காக முகக்கவசம் அணிந்து வருகின்றனர் என்றும் புகைப்படங்களளுடன் கூடிய செய்தி வெளியாகியுள்ளது

கொரோனா வைரஸ் பிறப்பிடமாக இருந்த வூகானில் இயல்பு நிலை திரும்பி விட்டாலும் மற்ற உலக நாடுகள் இன்னும் வைரஸில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

From around the web