உலகின் மூத்தமொழி, தாய்மொழி-"தமிழ் ";முதலமைச்சரின் அறிக்கை!

தமிழ் மொழியின் சிறப்பினைப் பற்றி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்!
 
tamil

தற்போது நம் தமிழகத்தில் ஆட்சியில் இந்த திராவிட முன்னேற்றக் கழகம்.  இந்த திராவிட முன்னேற்ற கழகம் பத்தாண்டுக்கு பின்னர் ஆட்சியில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் முதன் முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் அக்கட்சியின் தலைவரான மு க ஸ்டாலின். அவர் தான் தேர்தலில் கூறிய அத்தனை வாக்குறுதிகளையும் வரிசையாக நிறைவேற்றி மக்கள் மனதில் நல்லதொரு இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கால சூழலுக்கு ஏற்பவும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் மற்றும் நிவாரண நிதிகள் பொருள்களையும் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.stalin

மேலும்  அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது தமிழ் மொழிக்குரிய அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழ் மொழியானது உலகின் மூத்த மொழி திராவிட மொழிக் குடும்பத்தில் தாயாக விளங்குகிறது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த அறிக்கையில் இலக்கிய இலக்கணங்கள் கொண்ட சிறப்பான மொழியாகவும் தமிழ் விளங்குகிறது என்றும் புகழாரம் சூட்டியுள்ளார் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

மேலும் செம்மொழித் தகுதிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையிலும் எத்திசையிலும் தமிழ் மணக்க திமுக அரசு தொடர்ந்து உழைத்திடும் என்றும் அறிக்கையில் மு க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இந்திய அரசின் ஆட்சி -அலுவல் மொழியாக திமுக அரசு உறுதியுடன் பாடுபடும் என்றும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் எட்டாம் அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் இந்தியாவின் ஆட்சி- அலுவல் மொழியாக திமுக அரசு பாடுபடும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

From around the web