டெல்லியில் இருந்து லண்டனுக்கு பேருந்து: உலகில் மிக நீளப் பேருந்து பாதை என தகவல்

டெல்லியில் இருந்து லண்டனுக்கு விரைவில் பேருந்து சேவை தொடங்க இருப்பதாகவும் உலகிலேயே மிக நீளமான பேருந்து சேவை இதுதான் இருக்கும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது டெல்லில் இருந்து லண்டனுக்கு 70 நாட்களில் 14 நாடுகளை கடந்து செல்லும் பேருந்து ஒன்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் 20 இருக்கைகள் மட்டுமே இருக்கும் என்றும், இந்த பேருந்தில் பயணம் செய்ய ரூபாய் 15 லட்சம் கட்டணம் என்றும், கூறப்படுகிறது. இதில் டூரிஸ்ட் கைடு செலவு,
 

டெல்லியில் இருந்து லண்டனுக்கு பேருந்து: உலகில் மிக நீளப் பேருந்து பாதை என தகவல்

டெல்லியில் இருந்து லண்டனுக்கு விரைவில் பேருந்து சேவை தொடங்க இருப்பதாகவும் உலகிலேயே மிக நீளமான பேருந்து சேவை இதுதான் இருக்கும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

டெல்லில் இருந்து லண்டனுக்கு 70 நாட்களில் 14 நாடுகளை கடந்து செல்லும் பேருந்து ஒன்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் 20 இருக்கைகள் மட்டுமே இருக்கும் என்றும், இந்த பேருந்தில் பயணம் செய்ய ரூபாய் 15 லட்சம் கட்டணம் என்றும், கூறப்படுகிறது. இதில் டூரிஸ்ட் கைடு செலவு, டூரிஸ்ட் சென்டர்களை பார்க்க அனுமதி, ஹோட்டல்களில் தங்கும் செலவு, சாப்பாடு செலவு, விசா உள்பட அனைத்தும் செலவுகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த பேருந்து டெல்லியில் இருந்து கிளம்பி மியான்மர், தாய்லாந்து, லாவோஸ், மாஸ்கோ, மத்திய ஐரோப்பிய நாடுகள் வழியாக லண்டன் சென்றடையும் என்று கூறப்படுகிறது. அதேபோல் லண்டனில் இருந்து டெல்லிக்கு இணைப்பு இருந்து ஒன்றும் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது

இந்த பேருந்து எப்பொழுது முதல் தொடங்கப்படும் என்பது குறித்த உறுதியான தகவல் இல்லை என்றாலும் வெகு விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேருந்தில் பயணம் செய்ய இதுவரை 40 ஆயிரம் பேர் வரை முன்பதிவு செய்துள்ளதாகவும், இதிலிருந்து டெல்லியில் இருந்து லண்டனுக்கு உலகின் மிக நீள பேருந்து பாதையில் பயணம் செய்ய மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர் என்பதும் தெரிய வருகிறது

From around the web