70 வது சுகாதார நாளை கொண்டாடிய உலக சுகாதார அமைப்பு!!

உலக நலவாழ்வு நாள் என்பது உலக சுகாதார அமைப்பின் முடிவின் கீழ் ஒவ்வோர் ஆண்டும் 7 ஏப்ரல் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாறு கொண்டாடப்படுவது 1948 ஆம் ஆண்டு உலக நலவாழ்வு மன்றத்தின் கூட்டத்தில் ஆலோசித்து எடுக்கப்பட்டு முடிவாகும். அதன்பின்னர் அரசாணை பிறப்பிக்கப்பட்டு, 1950 ஆம் ஆண்டுமுதல் உலக நலவாழ்வு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி அனைவருக்கும் ஆரோக்யம் என்பதை குறிக்கோளாகக் கொண்டு இந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. அதாவது #HealthForAll
 
70 வது சுகாதார நாளை கொண்டாடிய உலக சுகாதார அமைப்பு!!

உலக நலவாழ்வு நாள் என்பது உலக சுகாதார அமைப்பின் முடிவின் கீழ் ஒவ்வோர் ஆண்டும் 7 ஏப்ரல் கொண்டாடப்பட்டு வருகிறது.

இவ்வாறு கொண்டாடப்படுவது 1948 ஆம் ஆண்டு உலக நலவாழ்வு மன்றத்தின் கூட்டத்தில் ஆலோசித்து எடுக்கப்பட்டு முடிவாகும்.

அதன்பின்னர் அரசாணை பிறப்பிக்கப்பட்டு, 1950 ஆம் ஆண்டுமுதல் உலக நலவாழ்வு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

70 வது சுகாதார நாளை கொண்டாடிய உலக சுகாதார அமைப்பு!!

அந்தவகையில் இந்த ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி அனைவருக்கும் ஆரோக்யம் என்பதை குறிக்கோளாகக் கொண்டு இந்த ஆண்டு கொண்டாடப்பட்டது.

அதாவது #HealthForAll என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, அதனை வலைதளங்களிலும் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் வைரலாக்கச் செய்தது.

மேலும் அந்த ஹேஸ்டேக்கின் கீழ் அனைவருக்கும் ஆரோக்யம் என்ற தலைப்பில் சில ஆலோசனைகள் மற்றும் விதிமுறைகளை வழங்கி இருந்தது.

அதில் குறிப்பிட்டு இருந்த சில விதிமுறைகள்,

1. உடற்பயிற்சி செய்வதைக் காட்டிலும் சிறந்த மருந்து வேறில்லை.

2. உணவு பொருட்களில் கட்டுப்பாடு மிக அவசியம், வயது அதிகமாகும்போது உடலுக்கு ஒவ்வாத உணவுகளை எடுத்துக் கொள்ளுதலை முற்றிலும் தவிர்த்தல் நல்லது.

3. உணவு எந்த அளவு முக்கியமோ, அதே அளவு உடலுக்கு சரியான தூக்கம் தேவை.

4. புகை, மது, கஞ்சா போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாதல் கூடாது.

From around the web