2.8 கோடியாக உயர்ந்தது உலக கொரோனா பாதிப்பு: இந்தியா முதலிடத்தை பிடிக்குமா?

உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்தையே ஆட்டுவித்து வரும் நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,019,754 ஆக அதிகரித்துள்ளது.
 

உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்தையே ஆட்டுவித்து வரும் நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,019,754 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 907,919 என்பதும், குணமானவர்களின் எண்ணிக்கை 20,095,924 என்பதும் குறிப்பிடத்தக்கது

உலக கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,549,475ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 195,239என்பதும், குணமானவர்களின் எண்ணிக்கை 3,846,095 என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,462,965 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 75,091 என்பதும், குணமானவர்களின் எண்ணிக்கை 3,469,084 என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வித்தியாசம் இருபது லட்சம் மட்டுமே விரைவில் இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என அஞ்சப்படுகிறது

ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,041,007 ஆக அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 18,135 என்பதும், குணமானவர்களின் எண்ணிக்கை 856,458    என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web