4 கோடியை நெருங்கியது உலக கொரோனா தொற்று: அதிர்ச்சி தகவல்

 

உலகில் கொரோனா தொற்றால் 3,95,65,948 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 11,08,617 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும், உலகில் கொரோனா தொற்றில் இருந்து 2,96,48,639 பேர் மீண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

உலகம் முழுவதும் தற்போது கொரோனா பாதிப்புடன் 88,08,692 பேர் சிசிக்சை பெற்று வருகிறார்கள் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது

உலகிலேயே கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 928 பேர் மரணம் என்றும், இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரு நாளில் 886 பேர் மரணம் என்றும், பிரேசிலில் 716 பேரும், மெக்ஸிகோவில் 387 பேரும் ஒரு நாளில் மரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஒட்டுமொத்தமாக உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 223,644 பேர் மரணம் என்றும், பிரேசிலில் கொரோனா தொற்றால் இதுவரை 153,229 பேர் மரணம் என்றும், இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒட்டுமொத்தமாக  113,032     பேர் மரணம் என்றும், மெக்ஸிகோவில் 85,285 பேரும், இங்கிலாந்தில் 43429 பேரும் இதுவரை உயிரிழப்பு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 71,688  பேருக்கு கொரோனா பாதிப்பு என்றும், இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 65,126 பேர் பாதிப்பு என்றும், பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 30,574  பேர் பாதிப்பு என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது

From around the web