தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்கள்: குறிப்பாக வெளி மாநில மக்களுக்கு உணவு போன்றவைகள்!

தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்
 
indian

தற்போது நம் தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. அதன்படி பத்து ஆண்டுக்கு பின்னர் தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. மேலும் நம் தமிழகத்தில் முதன் முறையாக முதலமைச்சராக பதவி வகிக்கிறார் மு க ஸ்டாலின். மேலும் அவர் தான் கூறிய தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றும் வரிசையாக நிறைவேற்றி மக்களிடையே  வரவேற்பினை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ஆட்சி குறித்து மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.stalin

இந்நிலையில் தற்போது அவர் தமிழக மக்கள் மட்டுமின்றி வெளி மாநில மக்களுக்கும் உதவி பண்ண வேண்டும் என்ற எண்ணத்தோடு பல நலத் திட்டங்களை அறிவித்து வருகிறார். மேலும் அவர்களுக்கு தொழிலாளர் நலத் திட்டங்களை கருதப்படுகிறது. அதன்படி கட்டுமான தொழிலாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் துவக்கி வைத்தார். முதற்கட்டமாக 2 லட்சம் கட்டுமான தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவக்கப்பட்டுள்ளது.

மேலும் வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தையும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துவக்கி வைத்தார். மேலும் அதில் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம்பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகிய உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

From around the web