வொர்க் ப்ரம் ஹோம் நிரந்தரமாகிறதா? பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக வீட்டில் இருந்து வேலை செய்யும் வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற பணியை செய்து வரும் சூழ்நிலையில் வருங்காலத்தில் வொர்க் ஃப்ரம் ஹோம் என்பது நிரந்தரமாக மாறும் நிலை இருப்பதாக கருதப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது பெரும்பாலான நிறுவனங்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற முறையை கடைபிடித்து வருவதால் அலுவலகத்துக்கு வந்து வேலை பார்க்கும் பணியை விட அதிகமாகவே வேலை நடப்பதாகவும் மேலும் நிர்வாக செலவு அதிகமாக மிச்சமாகி வருவதாகவும்
 

வொர்க் ப்ரம் ஹோம் நிரந்தரமாகிறதா? பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக வீட்டில் இருந்து வேலை செய்யும் வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற பணியை செய்து வரும் சூழ்நிலையில் வருங்காலத்தில் வொர்க் ஃப்ரம் ஹோம் என்பது நிரந்தரமாக மாறும் நிலை இருப்பதாக கருதப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பெரும்பாலான நிறுவனங்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற முறையை கடைபிடித்து வருவதால் அலுவலகத்துக்கு வந்து வேலை பார்க்கும் பணியை விட அதிகமாகவே வேலை நடப்பதாகவும் மேலும் நிர்வாக செலவு அதிகமாக மிச்சமாகி வருவதாகவும் ஐடி துறையினர் தெரிவித்து வருகின்றனர்

மேலும் அலுவலக வாடகை, கரண்ட் பில், இன்டர்நெட்டில் செலவு உள்பட ஏகப்பட்ட செலவு மிச்சமாகி வருவதாகவும், அதுமட்டுமின்றி ஊழியர்களும் மன அழுத்தம் இன்றி பணி செய்வதாக தெரிகிறது. மேலும் ஊழியர்களுக்கும் போக்குவரத்து செலவு, கேண்டீன் செலவு, டிராபிக் பிரச்சனை உள்பட எந்த பிரச்சனையும் இல்லை என்பதும் வீட்டில் குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருந்து கொண்டே வருமானமும் செய்வது என்பது மிகவும் சவுகரியமான ஒன்றாகவும் கருதப்படுகிறது

எனவே சென்னை மும்பை பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஐடி நிறுவனங்கள் அவசியம் அலுவலத்திற்கு வந்தே ஆகவேண்டும் போன்ற ஊழியர்களுக்கு மட்டும் சிறிய அளவில் அலுவலகத்தை வைத்துவிட்டு ஒட்டுமொத்தமாக வொர்க் ஃப்ரம் ஹோம் முறைக்கு மாறும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது
இதனால் அனைத்தும் ஐடி துறையினருக்கும் மிகப்பெரிய அளவில் செலவு மிச்சமாகும் என்றாலும் ரியல் எஸ்டேட் துறை படு வீழ்ச்சி அடையும் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web