இட்லி சாப்பிட மறுத்த குழந்தையை அடித்தே கொலை செய்த பெண்: அதிர்ச்சி தகவல்

இட்லி சாப்பிட மறுத்த 5 வயது பெண் குழந்தையை அடித்தே கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவது கள்ளக்குறிச்சி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 

இட்லி சாப்பிட மறுத்த 5 வயது பெண் குழந்தையை அடித்தே கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவது கள்ளக்குறிச்சி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் என்ற பகுதியில் உள்ள மேலவிழி கிராமத்தை சேர்ந்தவர் ரோசாரியோ என்பவருக்கு ஜெயராணி என்ற மனைவியும் ரென்சிமேரி என்ற 5 வயது குழந்தையும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயராணி இறந்துவிட்டதை அடுத்து ரோசாரியோ வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் மறைந்த ஜெயராணியின் மகள் ரென்சிமேரியை அவரது சகோதரி ஆரோக்கியமேரி வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் குழந்தைக்கு ஆரோக்கியமேரி இட்லி கொடுத்ததாகவும், ஆனால் இட்லியை அந்த குழந்தை சாப்பிட மறுத்துவிட்டு அந்த குழந்தை பக்கத்து வீட்டுக்கு ஓடிவிட்டதாகவும் தெரிகிறது. இதனை அறிந்த ஆரோக்கியமேரி, குழந்தையை ரோட்டில் போட்டு அடித்து மீண்டும் வீட்டுக்குள் அழைத்து வந்து கட்டையால் கடுமையாக தாக்கி உள்ளார்.

வலி தாங்காமல் குழந்தை அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஆரோக்கியமேரி வீட்டின் கதவை திறந்து குழந்தையை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் ஆரோக்கியமேரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web