பெண்ணின் திருமண வயது 21ஆக அதிகரிக்கப்படுகிறதா?

இந்தியாவில் பெண்ணின் திருமண வயது 18லிருந்து அதிகரிக்கப்படும் என்றும் அந்த வயதை 21 ஆக மாற்றுவதற்கு ஆலோசனை செய்து அது குறித்து கமிட்டி அமைக்கப்பட்டு முடிவு செய்யப்படும் என்றும் இன்று பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்தார் மேலும் கடந்த 1978 ஆம் ஆண்டு பெண்ணின் திருமண வயது 15 லிருந்து 18 ஆக உயர்த்தப்பட்டது தற்போது அந்த வயது 21 வரை உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார் ஏற்கனவே
 

பெண்ணின் திருமண வயது 21ஆக அதிகரிக்கப்படுகிறதா?

இந்தியாவில் பெண்ணின் திருமண வயது 18லிருந்து அதிகரிக்கப்படும் என்றும் அந்த வயதை 21 ஆக மாற்றுவதற்கு ஆலோசனை செய்து அது குறித்து கமிட்டி அமைக்கப்பட்டு முடிவு செய்யப்படும் என்றும் இன்று பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்தார்

மேலும் கடந்த 1978 ஆம் ஆண்டு பெண்ணின் திருமண வயது 15 லிருந்து 18 ஆக உயர்த்தப்பட்டது தற்போது அந்த வயது 21 வரை உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்

ஏற்கனவே 18 வயது வரை ஒரு பெண்ணை பாதுகாப்போடு வளர்க்க பெற்றோர்கள் கடும் சிரமத்தை அடைவதாகவும் ஆனால் 21 வயது என மாற்றினால் பெற்றோர்களுக்கு பெரும் சுமையாக இருக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

ஆனால் பெண்கள் கல்வியறிவு பெற்று வாழ்க்கையில் தன் சொந்த காலில் நிற்க வேண்டுமானால் திருமண வயதை அதிகரிப்பது சரிதான் என்றும் ஒரு சிலர் கருத்து கூறி வருகின்றனர். உங்கள் கருத்து என்ன என்பதை கமெண்ட் பகுதியில் தெரிவியுங்கள்

From around the web