9வது மாடியில் இருந்து கீழே விழுந்த பெண், அசால்ட்டாக எழுந்து நடந்து சென்றதால் பரபரப்பு!

ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு பெண் ஒன்பதாவது மாடியில் இருந்து கீழே விழுந்து எந்தவித காயமும் இல்லாமல் தானாக எழுந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த சிசிடிவி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது இங்கிலாந்தைச் சேர்ந்த ஆங்கில ஊடகமொன்று பதிவு செய்துள்ள செய்தி ஒன்றில் ரஷ்யாவை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் ஒரு பெரிய கட்டிடத்தின் ஒன்பதாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுகிறார் அவர் விழுந்த இடம் பனிபடர்ந்த
 
9வது மாடியில் இருந்து கீழே விழுந்த பெண், அசால்ட்டாக எழுந்து நடந்து சென்றதால் பரபரப்பு!

ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு பெண் ஒன்பதாவது மாடியில் இருந்து கீழே விழுந்து எந்தவித காயமும் இல்லாமல் தானாக எழுந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த சிசிடிவி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆங்கில ஊடகமொன்று பதிவு செய்துள்ள செய்தி ஒன்றில் ரஷ்யாவை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் ஒரு பெரிய கட்டிடத்தின் ஒன்பதாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுகிறார்

அவர் விழுந்த இடம் பனிபடர்ந்த இடமாக இருந்ததால் அவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. ஒரு சில நொடிகள் மட்டுமே அதிர்ச்சி அடைந்த அந்த பெண் பின் திடீரென சுதாரித்து எழுந்து சாலையில் சர்வசாதாரணமாக நடந்து சென்றது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது

இந்த வீடியோவை வைத்து ஒரு சிலர் அந்தப் பெண் வேற்றுகிரக பெண்ணாக இருக்கலாம் என்றும் வதந்தியை கிளப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web