சாட்டையால் அடித்த மந்திரவாதி: கல்லூரி மாணவி உயிரிழந்ததால் பரபரப்பு!

மந்திரவாதி ஒருவர் சாட்டையால் அடித்ததில் கல்லூரி மாணவி எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம் ராமநாதபுரம் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ராமநாதபுரம் அருகே கோரவள்ளி என்ற கிராமத்தில் கல்லூரி மாணவி ஒருவரின் தாய் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து தற்கொலை செய்த தாய் தனது மகள் மீது பேயாக பிடித்ததாக கூறப்பட்டதை அடுத்து மந்திரவாதி ஒருவரிடம் கல்லூரி மாணவியை அவரது உறவினர்கள் அழைத்துச் சென்றனர்
அப்போது கல்லூரி மாணவியை மந்திரவாதி சாட்டையால் அடித்துள்ளார். சாட்டையால் அடித்தால் அவரை பிடித்து இருந்த பேய் போய்விடும் என்று நம்பியதே இதற்குக் காரணம். இந்த நிலையில் மந்திரவாதி சாட்டையால் அடித்ததில் வலி தாங்காமல் சுருண்டு விழுந்த கல்லூரி மாணவி சில நிமிடங்களில் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து வருகின்றனர். தற்கொலை செய்த தாய் பேயாக மாறி மகளை பிடித்துள்ளதாக மூடநம்பிக்கையாக நம்பியதால் கல்லூரி மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த விவகாரம் ராமநாதபுரம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது