ஒலிம்பிக்கில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றால் கோடிக்கணக்கில் பரிசு!

தமிழக வீரர்கள் ஒலிம்பிக்கில் தங்கம் வெள்ளி வெண்கலம் பதக்கம் வென்றால் பரிசு தொகை அறிவிப்பு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்
 
olympics

தமிழகத்தில் தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது.  தமிழகத்தில் முதல்வராக உள்ளார் முகஸ்டாலின். மேலும் அவர் கூறிய தேர்தல் வாக்குறுதிகளை வரிசையாக நிறைவேற்றி வருகிறார். இந்த சூழலில் அவர் மக்களுக்கு உதவி பண்ணும் நோக்கத்தில் மக்கள் பணியாற்ற அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பலரும் அத்துறைகளில் சிறந்தவர்களாகவும் காணப்படுகின்றனர். இந்நிலையில் நான்காண்டுகளுக்கு ஒருமுறை உலகம் முழுவதிலிருந்தும் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் ஒரு விளையாட்டு நிகழ்ச்சி ஒலிம்பிக்.stalin

மேலும் இந்த ஒலிம்பிக்கில் அமெரிக்கா ரஷ்யா சீனா போன்ற நாடுகள் தங்கம் வெள்ளி வெண்கலம்  பதக்கங்களை வெல்லும் . தற்போதைய  ஒலிம்பிக் ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவின் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதில் பல நாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் நம் இந்தியாவிலும் பலரும் இதில் கலந்து கொள்ள உள்ளனர். தற்போது ஒலிம்பிக் போட்டி வீரர்களுக்கு தடுப்பூசி போடும் முகாமை தொடங்கி வைத்தார் நம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்.

மேலும் அவருடன் இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் சுப்பிரமணியன் போன்றோர் இருந்தனர் அதன் பின்னர் அவர் சில அறிவிப்புகளை கூறினார். அதன்படி இந்த ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு 3 கோடி ரூபாய் பரிசு கிடைக்கும் என்றும் கூறினார். மேலும் வெள்ளி வெல்லும் தமிழக வீரருக்கு இரண்டு கோடி ரூபாய் பரிசு என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து வெண்கலம் வெல்லும் தமிழக வீரருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகையையும் அறிவித்தார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்.

From around the web