தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்!

வெயில்காலம் தொடங்கினாலே பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் இயல்பை விட அதிகரிக்கும். மேலும் ஒரு சில பகுதிகளில் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அது சுட்டெரிக்கும். குறிப்பாக சென்னை போன்ற பகுதிகளில் வெயிலின் தாக்கம் தோடு மட்டுமின்றி குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படும். இதனால் சென்னைவாசிகள் மிகவும் அச்சத்துடன் இந்த கோடை காலத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் நிலை.

rain

தற்போது தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்பு வரை வெயிலின் தாக்கம் அது மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால் சில தினங்களாக தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் இந்த கனமழை இன்னும் இரண்டு நாட்களுக்கு தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்பமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது .மேலும் குறிப்பாக நீலகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் போன்ற  மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காற்றானது 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்றும் கூறியுள்ளது. மேலும் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை மழை பெய்யக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

From around the web