பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா? அதிகாரிகள் ஆலோசனை!

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் கல்விக்பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அவசர ஆலோசனையில் மேற்கொள்கிறார்!
 

ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு பெற்றுவிடும். ஆனால் இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்வு இன்னும் நடைபெறவில்லை. காரணம் என்னவெனில் தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதி தள்ளி வைக்கப்பட்டது. மேலும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆனது மே 3ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

tamilnadu

மேலும் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் சில தினங்களுக்கு முன்பு நிறைவு பெற்றது. ஆயினும் தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும என்ற குழப்பம் நிலவுகிறது. ஏனென்றால் தமிழகத்தில் சில வாரங்களாக கொரோனா தாக்கமானது தலைவிரித்தாடுகிறது. இதனால் மக்கள் மிகவும் அச்சத்தில் மேலும் தமிழக அரசானது இன்று மதியம் சில தளர்வுகளுடனும் கட்டுப்பாடுகளை கூறியுள்ளது. அதனால் 12 வகுப்பு பொது தேர்வு பற்றி தற்போது பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மே 3ஆம் தேதி திட்டமிட்டபடி நடத்துவதா? இல்ல ஒத்திவைப்பதாக? என்பது பற்றி ஆலோசனை செய்து வருகிறார். மேலும் காணொலி காட்சி மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியானது. மேலும் இந்த ஆலோசனையின் பின்னர் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்தான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web