முதல்வர் பதவி பறிக்கப்படுமா? கட்சித் தலைமை விரும்பும் வரை நான் தான் முதல்வர்!!!

பாஜக தலைமை கூறும் வரையில் கர்நாடகாவின் முதலமைச்சராக நீடிப்பேன் என்று கூறியுள்ளார் அம்மாநில முதல்வர் எடியூரப்பா
 
yediyurappa

தற்போது நம் இந்தியாவில் மிகவும் பலம் வாய்ந்த கட்சியாக உருவெடுத்துள்ளது பாஜக. மேலும் அவை தமிழகம் கேரளம் போன்ற இதர மாநிலங்களில் தவிர பிற மாநிலங்களில் பெரும்பான்மையை பிடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் பாஜக கட்சியின்  சார்பில் 4 எம்எல்ஏக்கள் சட்டசபையில் நுழைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது பாஜக சார்பில் கர்நாடகாவில் முதல்வராக உள்ளார் முதல்வர் எடியூரப்பா.yediurappa

மேலும் அவரின் முதல்வர் பதவி குறித்து பல்வேறு சர்ச்சைகளும் அவர் நீக்கப்படுவார் என்று வதந்திகள் பரவின. இதுகுறித்து அவர் பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அதன்படி தான் கட்சித் தலைமை அதாவது பாஜக விரும்பும் வரை முதல்வராக நீடிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் எடியூரப்பா மாற்றப்பட்டு வேறு ஒருவர் அந்த பொறுப்புக்கு வருவார் என அண்மைக்காலங்களாக தகவல்கள் வந்ததும் குறிப்பிடத்தக்கது. அவர் தற்போது செய்தியாளர்களிடம் தம் கட்சி தன் மீது நம்பிக்கை வைத்துள்ளது என்றும் எடியூரப்பா கூறியுள்ளார்.

மேலும் எடியூரப்பா மீது ஒருசில எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருந்ததாக யூகம் தெரிவித்துள்ளது, சுற்றுலா அமைச்சர் யோகீஸ்வர சமீபத்தில் டெல்லி சென்று கட்சித் தலைமையிடம் அதே தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் கர்நாடகாவில் அவர்களின் பதவி பறிக்கப்படும் என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா பதிலளித்துள்ளார்.

From around the web