டீசர்ட் மூலம் தமிழ் வளர்ந்துவிடுமா? வானதி சீனிவாசன் கேள்வி!

’ஐ எம் எ தமிழ் பேசும் இந்தியன்’ மற்றும் ’இந்தி தெரியாது போடா’ போன்ற வாசகங்களுடன் கூடிய டி-ஷர்ட்களை திரையுலக பிரபலங்கள் சிலர் அணிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள் என்பதும்,
 

’ஐ எம் எ தமிழ் பேசும் இந்தியன்’ மற்றும் ’இந்தி தெரியாது போடா’ போன்ற வாசகங்களுடன் கூடிய டி-ஷர்ட்களை திரையுலக பிரபலங்கள் சிலர் அணிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள் என்பதும், இதுகுறித்து டுவிட்டரில் கடந்த இரண்டு நாட்களாக ட்ரெண்டாகி வந்ததும் என்பதும் தெரிந்ததே. இதற்கு எதிராக ’திமுக வேண்டாம் போடா’ என்ற ஹேஷ்டேக்கையும் ஒரு சிலர் டிரெண்டாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இந்த நிலையில் டி-ஷர்ட் மூலம் ஒருபோதும் தமிழை வளர்க்க முடியாது என்றும் தமிழ் வளர்ச்சிக்காக உண்மையான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் மொழி திணிப்பு என்பதை பாஜகவும் எதிர்க்கத்தான் செய்கிறது என்றும் பாஜகவின் மாநில துணைத்தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் கூறியுள்ளார் 

ஹிந்தி திணிப்பு மற்றும் இந்தி எதிர்ப்புக் கொள்கை குறித்து திராவிட இயக்கங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்கள் மனதில் வளர்ந்துள்ள நிலையில் திடீரென ஹிந்தியை மத்திய அரசு திணிக்க முயற்சித்து வருவதாக எழுந்துவரும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்தான் இதுபோன்ற டீசர்ட் டிரெண்ட்டுகள் உருவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் பொதுமக்கள் மத்தியில் ஹிந்தி எதிர்ப்பு கொள்கை பெரிதாக இல்லை என்றும் திராவிடக் கட்சியினர் தொடர்ச்சியாக இந்தி எதிர்ப்புக் கொள்கையை பொது மக்களிடம் திணித்து வருவதாகவும் ஒரு சிலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்

From around the web