அக்டோபர் 1 முதல் புறநகர் ரயில் சேவை தொடக்கமா? புதிய உத்தரவால் பரபரப்பு

 

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் கடந்த 5 மாதங்களாக பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் சிக்கலில் இருந்தனர். ஆனால் செப்டம்பர் 1 முதல் கிட்டத்தட்ட அனைத்து தளர்வுகளும் அறிவிக்கப்பட்டதை அடுத்து தற்போது மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர் 

குறிப்பாக தலைநகர் சென்னையில் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்கள் ஓடத் தொடங்கியதை அடுத்து புறநகர் ரயில் சேவை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் புறநகர் ரயில் சேவையை தொடங்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது 

சற்றுமுன் வெளியான தகவலின் படி சென்னை புறநகர் ரயில் சேவையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் அக்டோபர் 1-ஆம் தேதியிலிருந்து பணிக்கு வர புறநகர் ரயில் சேவை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது

எனவே அக்டோபர் 1ஆம் தேதி முதல் புறநகர் ரயில் சேவை தொடங்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web