திட்டமிட்டபடி 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா? திடீர் ஆலோசனையால் பரபரப்பு

 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் தமிழக அரசு வரும் 16ம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் மட்டும் வரலாம் என்றும் அறிவித்து இருந்தது

இந்த நிலையில் தமிழக அரசின் இந்த முடிவிற்கு எதிர்க்கட்சிகள் குறிப்பாக திமுக கடும் கண்டனம் தெரிவித்தது. டெல்லி உள்பட ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்களுக்குப் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததாகவும் எனவே தமிழகத்தில் அத்தகைய நிலை வரக்கூடாது என்றும் எனவே பள்ளிகள் திறப்பதை ஜனவரி மாதம் வரை ஒத்திவைக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தது 

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி தமிழக முதல்வர் கல்வித்துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் திடீரென ஆலோசனை செய்து வருவதாகவும் இதனை அடுத்து பள்ளி கல்லூரிகள் பிறப்பது ஒத்திவைக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web