நவம்பர் 16ல் பள்ளிகள் திறக்கப்படுகிறதா? தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் நவம்பர் 16-ஆம் தேதி திறக்கப்படும் என்று பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக சற்று முன்னர் தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது

பள்ளிகள் திறப்பு குறித்து சூழ்நிலைக்கு ஏற்றவாறு பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் அந்த உத்தரவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை நவம்பர் 16ஆம் தேதி பள்ளிகள் திறப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது 

school

ஆனால் அதே நேரத்தில் டிசம்பர் இரண்டாம் தேதி முதல் அனைத்து ஆராய்ச்சி மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கும் என்றும் முதுநிலை இறுதியாண்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிற கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது குறித்த குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் தமிழக அரசு தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது

ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டு உள்பட அரசியல்கட்சிகளும் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்தும், பெற்றோர்கள் இப்போதைக்கு பள்ளிகள் திறக்க வேண்டாம் என கருத்து கூறியதை அடுத்தும் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web