காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் கற்பழிப்பு நடந்தால் ராகுல்காந்தி போவாரா?

 

உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஹாத்ராஸ் என்ற பகுதியில் இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

இந்த சம்பவத்தை அடுத்து ஹாத்ராஸ் செல்ல முயன்ற ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது 
மேலும் ராகுல் காந்தியை போலீஸார் தள்ளிவிட்டதாகவும் அதனால் அவர் கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் ராகுல்காந்தி கைதுக்கு கடும் கண்டனங்களை காங்கிரஸ் பிரமுகர்கள் தெரிவித்து வரும் நிலையில் பாஜகவை சேர்ந்த பிரமுகர் ஒருவர் காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் கற்பழிப்பு நடந்தால் ராகுல்காந்தி போவாரா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளார் 

இறந்தவர்களை வைத்து இழந்ததை ஈடுகட்ட நினைக்கும் இத்தாலி கருப்பு ஆடுகளை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web