மூன்றாவது முறை முதல்வர் ஆவாரா? மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு!

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது!
 
மூன்றாவது முறை முதல்வர் ஆவாரா? மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு!

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. அதே தேதியில் புதுச்சேரி மற்றும் கேரளாவில் நடைபெற்றது. மேலும் இந்த மூன்று மாநிலங்களில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது .சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கையானது மே இரண்டாம் தேதி எண்ணபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் மேற்கு வங்கத்தில் நடைபெற்றது. மேலும் மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் தற்போது முதல்வராக உள்ளார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மம்தா பானர்ஜி.mamata

தற்போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.அதன்படி மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது 152 தொகுதி முதல் 164 தொகுதிகள் வரை  கைப்பற்றும்  என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பாஜக அவனது 109 தொகுதிகள் முதல் 121 தொகுதிகள் வரை கைப்பற்றும்  என்றும் கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆனது 14 முதல் 25 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்றும் கருத்துக் கணிப்பில் வெளியாகிறது.

மேலும் காங்கிரஸ் கட்சியானது மேற்குவங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கருத்துக்கணிப்பின் முடிவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சாதகமாக உள்ளதால் அவர் மீண்டும் முதல்வராக வெற்றி பெறுவாரா? என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவர் கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெற்று பத்தாண்டுகளாக முதல்வராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web