தமிழகத்துக்கு வரும் அமித்ஷா ரஜினியை சந்திப்பாரா?

 

தமிழகத்துக்கு வரும் அமித்ஷா ரஜினியை சந்திப்பாரா? பாஜகவுக்கு ரஜினி ஆதரவு கொடுக்க சம்மதிப்பாரா? என்பது குறித்த தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பீகாரை அடுத்து தமிழகத்தை குறி வைத்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 21ஆம் தேதி தமிழகம் வர உள்ளார். இந்த வருகையின்போது அவர் ரஜினியை சந்தித்துப் பேசுவார் என்றும் இந்த சந்திப்பு, ரகசிய சந்திப்பாக இருக்க வாய்ப்பு இருப்பதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன 

ரஜினியை பொறுத்தவரை தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்பதே அவருடைய எண்ணமாக இருக்கிறது. இருப்பினும் பாஜகவினர் அவரை தங்கள் கட்சியில் இழுக்க கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர் 

amitshah

இந்த நிலையில் தற்போது உடல்நிலையை காரணம் காட்டி ரஜினி அரசியலுக்கு வருவதே சந்தேகம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்திற்கு வரும் 21ஆம் தேதி வரை வருகை தரும் அமித்ஷா, ரஜினியை நேரில் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 

இந்த சந்திப்பு பாஜகவில் ரஜினியை இழுக்க கடைசி முயற்சியாக இருக்கும் என்றும் இந்த முயற்சிக்கு பின்னர் அமித்ஷாவின் அடுத்தகட்ட முடிவு அதிரடியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அமித்ஷாவுடனான சந்திப்பிற்கு பின் ரஜினிகாந்த் பாஜகவில் இணைவாரா அல்லது வழக்கம்போல் நழுவுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 

From around the web