பெரியாருக்கு பதில் மோடியை தலைவராக ஏற்றதா அதிமுக?காங்கிரஸ் எம்பி பா சிதம்பரம்!

தந்தை பெரியாருக்கு பதிலாக பிரதமர் நரேந்திர மோடியை தலைவராக வழிகாட்டியாக அதிமுக ஏற்றுக்கொண்டு விட்டதா?
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளது.தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நாளை நடைபெற உள்ள தேர்தலுக்காக வேலைப்பாடுகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் பல கூட்டணிதங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளன.  மேலும் சுயேச்சை வேட்பாளர் பலரும் தங்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது.

admk

அதற்காக பாஜகவிற்கு அதிமுக தரப்பிலிருந்து 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சில தினங்களாக பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் பரப்புரை மேற்கொண்டு தனது கூட்டணி மற்றும் தனது வேட்பாளர்களை ஆதரித்து வந்தார். இந்நிலையில் தற்போது காங்கிரஸ் எம்பி பா சிதம்பரம் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கேள்வி ஒன்று எழுப்பியுள்ளார்.

அது என்னவெனில் தந்தை பெரியாருக்கு பதிலாக பிரதமர் நரேந்திர மோடியை தலைவராக, ஆசானாக, வழிகாட்டியாக அதிமுக ஏற்றுக்கொண்டு விட்டதா? என அவர் கூறியுள்ளார். மேலும் பாஜக இளைஞர் அணியின் தேஜஸ்வி சூர்யா பேச்சு பற்றியும் காங்கிரஸ் எம்பி சிதம்பரம் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் என்று கேள்வி எழுப்பினார். மேலும் திராவிட கட்சி என்றும் சொல்லும் அதிமுக பாஜக தலைவரின் பேச்சைக் கண்டிக்கவில்லை எனவும் சிதம்பரம் கூறியுள்ளார். சனாதன தர்மம் என்ற கொள்கையை எதிர்த்து போராடிக் கொண்டு அவர் தந்தை பெரியார் எனவும் அவர் கூறினார்.

மேலும் தமிழகத்தில் பெரியார் இடத்தை பாஜக முடிவுக்கு கொண்டுவரும் என பாமக இளைஞர் அணியின்  தேஜஸ்வி சூர்யா பேச்சு பற்றி காங்கிரஸ் எம்எல்ஏ எம்பி பா சிதம்பரம் கூறியுள்ளார்.மேலும் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி என்று அழைக்கப்படும் பாமக கட்சியும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web