வாக்கு எண்ணும் மையத்தில் வைஃபை! அதிகாரிகள் மழுப்பல்!

திருவள்ளூர் வாக்கு எண்ணும் மையத்திற்கு வைஃபை ரவுட்டரை கொண்டு வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு!
 
வாக்கு எண்ணும் மையத்தில் வைஃபை! அதிகாரிகள் மழுப்பல்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் அறிவித்தபடி ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது.மேலும் இதில் வாக்காளர் அனைவரும் காலையிலேயே சென்று வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். மேலும் அவர்களுக்கு முகக்கவசம் கையுறை போன்றவைகளும் வழங்கப்பட்டன. மேலும் அவர்களின் உடல் வெப்ப நிலையும் பரிசோதிக்கப்பட்டன. தமிழகத்தில் வாக்கு பதிவானது 12 மணி நேரமாக காலை 7 மணி தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது.vote

மேலும் இரவு 7 மணிக்கு பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு தற்போது வரை பாதுகாப்பு மத்தியில் மிகவும் கண்காணிப்புடன் கவனமாக பார்க்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் வாக்குப்பதிவு இன்னும் இரண்டு மூன்று நாட்களில் என்ன உள்ளதால் தற்போது பாதுகாப்பு மிகவும் கவனமாக்கப்பட்டுள்ளது. எனினும் ஒரு சில வாக்கு எண்ணும் மையங்களில்  பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் ஒரு பரபரப்பான தகவல் கூறப்படுகிறது.

 அதன்படிதிருவள்ளூரில் வாக்கு எண்ணும் மையத்திற்கு வைஃபை ரவுட்டரை  கொண்டு வந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்த வாகனத்தில் 5 வை-பை கருவிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இதன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இதுகுறித்து அதிகாரிகளுடன் கேட்கையில் வைப்பை கருவிகளை தவறுதலாக கொண்டுவந்ததாக அதிகாரிகள் மழுப்பலான பதில் கூறினர்.மேலும் இது குறித்து அப்பகுதியில் தற்போது மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது மட்டுமின்றி வாக்குவாதமும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

From around the web