சென்னையில் திடீரென கொரோனா அதிகரிப்பது ஏன்? காவல் ஆணையர் தகவல்!

 

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் கொரோனா வைரஸ் வெகுவாக குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக திடீரென மீண்டும் அதிகரித்து வருகிறது 

கடந்த சில நாட்களாக சென்னையில் தினமும் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக செப்டம்பர் 1 முதல் தளர்வுகள் நீக்கப்பட்ட பின்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது 

இந்த நிலையில் சென்னை மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தல் மாஸ்க் அணிவது போன்ற அடிப்படை விதிமுறைகளை கடைப் பிடிக்காமல் இருப்பதாகவும் இதனால்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது என்றும் சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அவர்கள் வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார் 

முன்னணி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த கொரோனா விதிமுறைகளை சரியாக கடைப்பிடிக்காமல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் குறிப்பாக சமூக இடைவெளி கடைபிடித்தல், மாஸ்க் அணிதல் இவை இரண்டையும் சென்னை மக்கள் பின்பற்றியே ஆக வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 

சென்னையில் குறைந்தது 400 முதல் 500 பேர் வரை மாஸ்க் அணியாமல் வெளியே வந்த குற்றத்திற்காக அபதாரம் செலுத்துகின்றனர் என்றும் மேலும் 90 சதவீதம் பேர் சென்னை மக்கள் மாஸ்க் அணிவது இல்லை என்றும் அவர்கள் மகேஷ் குமார் அவர்கள் பார்த்ததுடன் தெரிவித்துள்ளார் 

From around the web