ஒரே ஒருமுறை கையசைத்ததால் கோடிக்கணக்கில் பணத்தை இழந்த நமீதா: அதிர்ச்சி தகவல்

நடிகை நமீதா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாஜகவில் இணைந்தார் என்பதும் அவருக்கு தற்போது பாஜகவில் பதவி அளிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே இந்த நிலையில் நமீதாவின் ஒரு சில ஆண்டுகளுக்கு முந்தைய அரசியல் வாழ்க்கை குறித்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்த நமீதாவை அதிமுக-வில் பயன்படுத்திக்கொள்ள அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஒவ்வொரு மாவட்டம் தோறும் அவரது பொதுக்கூட்டம் நடத்தவும் ஜெயலலிதா உத்தரவிட்டு
 
ஒரே ஒருமுறை கையசைத்ததால் கோடிக்கணக்கில் பணத்தை இழந்த நமீதா: அதிர்ச்சி தகவல்

நடிகை நமீதா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாஜகவில் இணைந்தார் என்பதும் அவருக்கு தற்போது பாஜகவில் பதவி அளிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் நமீதாவின் ஒரு சில ஆண்டுகளுக்கு முந்தைய அரசியல் வாழ்க்கை குறித்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்த நமீதாவை அதிமுக-வில் பயன்படுத்திக்கொள்ள அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

ஒவ்வொரு மாவட்டம் தோறும் அவரது பொதுக்கூட்டம் நடத்தவும் ஜெயலலிதா உத்தரவிட்டு இருந்ததாகவும் ஒரு பொதுக் கூட்டத்திற்கு ரூபாய் 5 லட்சம் அவருக்கு வழங்கவும் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தி இருந்ததாகவும் கூறப்பட்டது.

ஒரு மாவட்டத்தில் நான்கைந்து கூட்டங்கள் நடக்கும் என்பதால் அவருக்கு கோடிக்கணக்கில் வருமானம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் ஜெயலலிதாவின் மேடை ஒன்றில் நமீதா கலந்து கொள்வதற்காக மேடை ஏறியபோது, அவர் ஜெயலலிதாவை முதலில் வணங்காமல் பொதுமக்களைப் நோக்கி கையசைத்தார் என்றும், நமீதாவை கண்ட பொதுமக்கள் ஆர்ப்பரித்து கைதட்டி அவரை வரவேற்றதாகவும், இதனால் ஜெயலலிதா ஆத்திரமடைந்து அந்த மேடை நிகழ்ச்சி முடிந்த உடனே கட்சியிலிருந்து அவரை ஒதுக்கிவைக்க கட்டளையிட்டதாகவும் செய்திகள் வெளியானது

நமீதா பொதுமக்களைப் பார்த்து ஒரே ஒருமுறை கையை அசைத்தால் அவருக்கு வரவேண்டிய கோடிக்கணக்கான பணம் நஷ்டம் ஏற்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் கசிந்து வரும் செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web