தடை செய்யப்பட்டும் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பப்ஜி நீக்கப்படாதது ஏன்? மத்திய அரசு விளக்கம் 

பப்ஜி கேமால் ஏராளமானோர் பாதிக்கப்படுவதாகவும் மனநிலை பாதிக்கப்பட்டு ஒரு சிலர் தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவங்களும் நடந்து வருவதால் இந்த கேமை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்தது 

 

பப்ஜி கேமால் ஏராளமானோர் பாதிக்கப்படுவதாகவும் மனநிலை பாதிக்கப்பட்டு ஒரு சிலர் தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவங்களும் நடந்து வருவதால் இந்த கேமை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்தது 

அதுமட்டுமின்றி பப்ஜி கேம் சீனாவின் கேம் என்பதால் அதனை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வந்தது. இந்த நிலையில் நேற்று மத்திய அரசு பப்ஜி உள்பட 118 செயலிகளுக்கு தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்தியாவின் பாதுகாப்பு நலன் கருதியும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக இருப்பதாகவும் இந்த செயலிகள் தடை செய்யப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது. ஆனால் அதே நேரத்தில் தடை செய்யப்பட்டு 24 மணி நேரம் ஆகியும் இன்னும் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர்களில் பப்ஜி கேம் டவுன்லோட் செய்யப்படும் நிலையில் உள்ளதாகவும் இதனால் தற்போதும் பலர் இந்த கேம் டவுன்லோட் செய்து கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது

இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்தபோது பப்ஜி உட்பட 118 செயலிகளும் 69ஏ சட்டப்படி தடை செய்யப்பட்டு இருப்பதாகவும் கூகுள் பிளே ஸ்டோருக்கு தகவல் அனுப்பப்பட்டு விட்டதாகவும் விரைவில் பிளே ஸ்டோரிலிருந்து பப்ஜி நீக்கப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளது

From around the web