ரஜினியிடம் ‘யார் நீங்க’ என்று கேட்டது ஏன்? தூத்துகுடி வாலிபர் பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தூத்துகுடி சென்றபோது கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால் அரசியல் கட்சி தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துகுடி இளைஞர் சந்தோஷ் என்பவர் ரஜினியை யார் நீங்க’ என்ற கேட்டது டுவிட்டரில் அகில இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. இதுகுறித்து அந்த இளைஞர் விளக்கமளித்து கூறியதாவது: எனக்கு ரஜினி படங்கள் மிகவும் பிடிக்கும். நானும் ரஜினி ரசிகன்தான். கபாலி படத்தை தியேட்டருக்குள் சீட் கிடைக்காமல் நின்றபடியே பார்த்தவன்
 

ரஜினியிடம் ‘யார் நீங்க’ என்று கேட்டது ஏன்? தூத்துகுடி வாலிபர் பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தூத்துகுடி சென்றபோது கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால் அரசியல் கட்சி தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துகுடி இளைஞர் சந்தோஷ் என்பவர் ரஜினியை யார் நீங்க’ என்ற கேட்டது டுவிட்டரில் அகில இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. இதுகுறித்து அந்த இளைஞர் விளக்கமளித்து கூறியதாவது:

எனக்கு ரஜினி படங்கள் மிகவும் பிடிக்கும். நானும் ரஜினி ரசிகன்தான். கபாலி படத்தை தியேட்டருக்குள் சீட் கிடைக்காமல் நின்றபடியே பார்த்தவன் நான். அவரைத் தான் நான் என் ஹீரோவாக நினைத்துள்ளேன். அவருக்குத்தான் தமிழகத்தில் மக்கள் ஆதரவு அதிகம் உள்ளது. ஸ்டைல் மன்னனான அவரை கமல்ஹாசனுடன் ஒப்பிட முடியாது. அப்படிப்பட்டவர் ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்கு ஆதரவு கொடுத்திருக்க வேண்டும் என்பதே எங்களின் ஓட்டு மொத்த ஆதங்கமாகும்.

ரஜினியிடம் ‘யார் நீங்க’ என்று கேட்டது ஏன்? தூத்துகுடி வாலிபர் பேட்டி100 நாட்களுக்கும் மேலாக நாங்கள் ஸ்டெர்லைட்டை மூடக்கோரி போராடினோம். அந்த சமயத்தில் ரஜினி எங்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தால் எங்கள் போராட்டம் மேலும் பலமும், வலிமையும் பெற்றிருக்கும். நாங்களும் அவரை புதிய கோணத்தில் பார்த்து இருப்போம். ஆனால் நடந்ததெல்லாம் எங்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக உள்ளது. எங்கள் போராட்டத்தை பற்றி அவர் இந்த அளவுக்கு விமர்சித்து பேசுவார் என்று நினைக்கவில்லை. எனவே தான் நான் இதுபற்றி ரஜினியிடம் கேள்வி கேட்க நினைத்தேன்.

எனது கோபம் எல்லாம், எங்களுக்கு தேவைப்படும் போது ரஜினி வரவில்லையே என்பதுதான். அதைத்தான் சற்று மாறுபட்ட விதமாக ரஜினியிடம் நான் கேள்வியாக எழுப்பினேன். ஆனால் எனது கேள்வி மக்கள் மத்தியில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ரஜினியை வேதனைப்படுத்த வேண்டும் என்பதற்காக நான் அந்த கேள்வியைக் கேட்கவில்லை. புகழ்பெற்ற ஒருவரை புண்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு அவர் ஆதரவு தெரிவிக்கவில்லையே என்ற வருத்தம்தான் என்னை அப்படி கேள்விக் கேட்க வைத்தது. இவ்வாறு சந்தோஷ் கூறினார்

From around the web