விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது ஏன்? தேமுதிக விளக்கம்

 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவரும் சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதன் பின் குணமாகி வீடு திரும்பினார்கள் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் நேற்று இரவு திடீரென விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவருக்கு மீண்டும் கொரோனாவா? அல்லது வேறு ஏதும் பிரச்சனையா என்ற கவலை தேமுதிக தொண்டர்கள் இடையே இருந்தது 

மேலும் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகளும் சமூகவலைதளத்தில் பரவி வந்த நிலையில் தேமுதிக தலைமைக் கழகம் விஜயகாந்த் உடல்நில குறித்து விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது: அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் இரண்டாம் கட்ட பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். கேப்டனின் உடல்நிலை குறித்து வெளியாகும் வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை அடுத்தே தேமுதிக தொண்டர்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web