சித்த மருத்துவர்கள் மீது சந்தேகம் ஏன்? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக கூறிய சித்த மருத்துவர் தணிகாசலம் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறித்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது இன்றைய விசாரணையின்போது சித்த மருத்துவர் தணிகாசலத்தை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததற்கு என்ன காரணம்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தன்னிடம் கொரோனா தொற்றுக்கு மருந்து உள்ளது என அவர் தெரிவித்தால் அவருடைய மருந்தை பரிசோதிக்க ஏற்பாடு செய்யலாமே? அதனை விடுத்து, ஏன்
 

சித்த மருத்துவர்கள் மீது சந்தேகம் ஏன்? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக கூறிய சித்த மருத்துவர் தணிகாசலம் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறித்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது

இன்றைய விசாரணையின்போது சித்த மருத்துவர் தணிகாசலத்தை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததற்கு என்ன காரணம்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தன்னிடம் கொரோனா தொற்றுக்கு மருந்து உள்ளது என அவர் தெரிவித்தால் அவருடைய மருந்தை பரிசோதிக்க ஏற்பாடு செய்யலாமே? அதனை விடுத்து, ஏன் அவரை கைது செய்யவேண்டும்? என்று கேள்வி எழுப்பினர்.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”‘

என்ற குறளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சித்த மருத்துவர்கள் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறினாலே சந்தேகப்படும் சூழல் என்றும் என்ரும், 60 ஆண்டுகளாக சித்த மருத்துவராக உள்ள டாக்டர் சுப்பிரமணியன் என்பவர், கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டறிந்ததாக ஆரம்பத்திலேயே தமிழக அரசிடம் தெரிவித்தும், அது புறக்கணிக்கப்பட்டது என்றும், அதன்பின் அவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையை நாடியதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

தமிழக அரசு தரும் கபசுர குடிநீர் சிகிச்சையே சித்த மருத்துவம் தான் என்றும், சித்த மருத்துவத்தின் மீது பாகுபாடு காட்ட வேண்டாம் என்றும், சித்த மருத்துவர் வீரபாபு எத்தனை கொரோனா நோயாளிகளை குணப்படுத்தியுள்ளார் என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர் மேலும் தணிகாசலம் குறிப்பிட்ட மருந்து குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும், நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு மத்திய மாநில அரசுகள் ஜூலை 23ம் தேதியன்று பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

From around the web