தடுப்பூசி இல்லனா ஏன் விளம்பரம் செய்றீங்க? மக்கள் கொந்தளிப்பு!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதாக தகவல் எழுந்துள்ளது!
 
தடுப்பூசி இல்லனா ஏன் விளம்பரம் செய்றீங்க? மக்கள் கொந்தளிப்பு!

மக்கள் மத்தியில் தற்போது ஆட்கொல்லி நோயாக  எங்கு பார்த்தாலும் வலம்வந்து வருவது கொரோனா. கொரோனா மக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பது மட்டுமல்லாமல் அவர்களின் உயிரை வாங்குவதும் மிகவும் கொடுமையான செயலாகும் .அத்துடன் கடந்த ஆண்டு இந்தியாவில் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது  மீண்டும் அதிகரித்து மக்களை மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்தியாவில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஒவ்வொரு மாநிலம் சார்பிலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

corona

அதன் படி ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளன. மேலும் கொரோனா நோய்க்காக முக கவசம் அணிவது போன்ற பல்வேறு செயல்கள் மூலம் மக்கள் தங்களுக்குள் வராமல் கட்டுப்படுத்துகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா நோய்க்கு எதிராக இரண்டு விதமான தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு நடைமுறையில் உள்ளன. மேலும் இந்ததடுப்பூசி  ஒவ்வொரு மாநிலத்திலும் கொண்டு செல்லப்பட்டு  அரசு மருத்துவமனைகளில் மூடப்பட்டு வருகின்றன. தற்போது பல மாநிலங்களில் இந்நோயின் தடுப்பூசிகள் தட்டுப்பாட்டில் உள்ளது மிகுந்த சோகத்தை அளிக்கிறது.

மேலும் தமிழகத்தில் பல அரசு மருத்துவமனைகளில் நோய்கான தடுப்பூசிகள் தட்டுப்பாட்டில் உள்ளது மிகுந்த சோகத்தில் உள்ளது. இதன்படி சேலம் மாவட்டத்தில்  தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு மக்களை திங்கட்கிழமை வருமாறு ஊழியர்கள் திரும்ப அனுப்புகின்றனர். மேலும் சேலம் குமாரசாமிப்பட்டி யிலுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் கதவை பூட்டி வைத்தால் மக்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். மேலும் அங்கு வந்த மக்கள் தடுப்பூசி இல்லை என்றால் ஏன் விளம்பரம் செய்கிறீர்கள் என்று கொந்தளித்து கேள்வி எழுப்புகின்றனர். இதனால் அப்பகுதியில் தட்டுப்பாடு நிலவுவது தற்போது தெரியவந்துள்ளது.

From around the web