திடீரென ரஜினிகாந்த் பின்வாங்கியது ஏன்? பரபரப்பு தகவல்

 

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தனது சொந்தமான ராகவேந்திரா மண்டபத்திற்கு விதிக்கப்பட்ட சொத்து வரியை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு ஒரு சில மணி நேரங்களில் திரும்ப பெற முடிவு செய்யப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நடிகர் ரஜினிகாந்த்துக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்துக்கு சொத்துவரி ரூபாய் 6.5 லட்சம் சென்னை மாநகராட்சி விதித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஜினிகாந்த் கடந்த ஆறு மாதங்களாக மண்டபத்தில் வருமானம் இல்லை என்றும் எனவே அதற்கு விதிக்கப்பட்ட சொத்து வரியை நீக்க வேண்டும் என்றும் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் 
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி, ரஜினிக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி 10 நாட்கள் கழித்து வழக்கு தொடர்ந்திருக்கிறீர்கள் என்றும், நீதிமன்ற நேரத்தை ஏன் வீணடிக்கின்றீர்கள் என்றும், ரஜினியை கண்டித்த நீதிபதி அதிக அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்யப் போவதாக எச்சரித்தார்

இதனை அடுத்து அபராதம் விதிக்க வேண்டாம் என்றும் வழக்கை திரும்ப தருகிறோம் என்றும் ரஜினிகாந்த் தரப்பில் கூறப்பட்டதையடுத்து வழக்கை திரும்பப் பெற நீதிபதி ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிகிறது

நீதிபதியின் கண்டிப்பு காரணமாக ரஜினிகாந்த் தனது முடிவில் இருந்து பின் வாங்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web