யாரா இருந்தாலும் சரி; எந்த இடமாக இருந்தாலும் சரி; நடவடிக்கை உறுதி!!!

கொரோனா சிகிச்சை நிவாரண பணி அலுவலர்கள் நிறுவனங்கள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டுமென தலைமைச் செயலாளர் கூறியுள்ளார்!
 
யாரா இருந்தாலும் சரி; எந்த இடமாக இருந்தாலும் சரி; நடவடிக்கை உறுதி!!!

தற்போது நாடெங்கும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் நோயாளிகள் நிறைந்து காணப்படுகின்றனர். காரணம் என்னவெனில் தற்போது ஆட்கொல்லி நோயின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. அந்தப்படி தற்போது ஆட்கொல்லி நோயாக மக்கள் அனைவராலும் கருதப்படுவது கொரோனா. இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா எழுந்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. இதற்காக பல்வேறு மாநில அரசுகளும் கட்டுப்பாட்டு விதிகளுடன் கொரோனா நோய்க்கு எதிராக போராடுகின்றனர்.treatment

பலரும் இதில் ஊழல் செய்கின்றனர். இதனை தடுக்க தற்போது தமிழகத்தின் தலைமைச் செயலர் சில அறிவுரைகளும் எச்சரிக்கைகளும் விடுத்துள்ளார். அதன்படி கொரோனா சிகிச்சை, நிவாரண பணி அலுவலர்கள், நிறுவனங்கள் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என தலைமைச் செயலாளர் கூறியுள்ளார். மேலும் சில அரசு அலுவலர்கள் தனியார் மருத்துவமனைகள் சட்டத்திற்குப் புறம்பான செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நம் தலைமைச் செயலர் கூறியுள்ளார்.

மேலும் தவறு செய்யும் அலுவலர்கள் மீது பணிநீக்கம் உட்பட துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தலைமைச் செயலர் இறையன்பு கூறியுள்ளார். தவறு நடக்கக் கூடிய இடங்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தப்படும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் கூடுதல் விலைக்கு மருந்து விற்பது அரசின் இலவச சேவைகளை லஞ்சம் பெற்றாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

எந்த நிலையிலும் உள்ள அலுவலர் எந்த நிறுவனமாக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு எனவும் இறையன்பு கூறியுள்ளார். அரசு ஊழியர்கள் கவனமாகவும் செயல்பட வேண்டும் எனவும் தலைமைச் செயலர் இறையன்பு அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

From around the web