ஊரடங்கை மீறுவோரிடம் யார் யாரெல்லாம் அபராதம் வசூல் செய்யலாம்: தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 5 மாதங்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஊரடங்கில் பல்வேறு தடைகள் ஏற்பட்டாலும் செப்டம்பர் 30 வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது 

இதனால் 5 பேருக்கு மேல் பொதுவெளியில் கூடக்கூடாது, மாஸ்க் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதும் இதனை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் ஊரடங்கை மீறுவோரிடம்அபராதத்தை யார் யாரெல்லாம் வசூலிக்கலாம் என்பது குறித்து தமிழக அரசின் சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. இந்த விளக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவை பின்வருமாறு:

1. பொதுசுகாதாரத்துறையில் சுகாதார ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்கள் அபராதம் வசூலிக்கலாம்

2 வருவாய்த்துறையில் வருவாய் ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்கள் அபராதம் வசூலிக்கலாம்

3. காவல்துறையில் உதவி ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்களும் அபராதம் வசூலிக்கலாம் 

இவ்வாறு தமிழக அரசு அறிவிப்பு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web