இந்த வேலையை பார்த்தது யார் ? "காரில் 5 லட்சம் மதிப்பிலான கள்ள சாராயம்" 

காரில் இருந்து 5 லட்சம் மதிப்பிலான கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர் காவல்துறையினர்!
 
liquor

தற்போது நம் தமிழகத்தில் ஊரடங்கு காலகட்டம் நிகழ்கிறது. அதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில் அத்தியாவசிய பொருளான காய்கறிகள் விற்பனை கூட வீடுதேடி விற்கப்படுவதால் சந்தைகளும் மூடப்பட்டுள்ளன .இத்தகைய சந்தை கட்டுப்பாடு என்றால் தமிழகத்தில் பலரின் வாழ்க்கையை சீரழிக்கும் போதை பொருளாக காணப்படுகின்ற மதுபானத்தின் அத்தனை கடைகளும் மூடப்பட்டு உள்ளதாக காணப்படுகிறது. இதனால் மது பிரியர்கள் அதிகமானோர் தங்களுக்கு தேவையான மதுபானங்களை முன்கூட்டியே வாங்கி வைத்து இருப்பு வைத்துக் கொள்கின்றனர்.liquer

மேலும் அவர்கள் கள்ள சந்தையில் விற்கப்படுகிறது. மேலும் அவர்களை காவல்துறையினர் வன்மையாக கண்டித்து ஒரு சில நேரங்களில் அவர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது கள்ளச்சாராயம் ஒன்று காரின் வைக்கப்பட்டதாக காணப்படுகிறது. இச்சம்பவம் செய்யாறு அருகே நிகழ்ந்ததாக காணப்படுகிறது. அதன்படி செய்யாறு அருகே கேட்பாரற்று நின்றிருந்த காரில் 5 லட்சம் மதிப்பிலான கள்ளச்சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் குடியன் தண்டலம் கிராமத்தில் ஏரி பகுதியில் நின்றிருந்த இந்த காரில் கள்ளச்சாராயத்தை கைப்பற்றியது நம் தமிழக போலீசார்.

மேலும் அதில் 10 கேண்களில் கள்ளச்சாராயத்தை காரில் பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. மேலும் இந்த கார் மற்றும் இதனை செய்தவர் யார் என்று போலீசார் தீவிர விசாரணையில் வருகின்றனர். இதனால் தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகமாக நிகழ்வது மிகுந்த வேதனை அளிக்கிறது.

From around the web