சூர்யா அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் இவரா? அதிர்ச்சியில் காவல்துறையினர் 
 

 

நேற்று மாலை திடீரென சூர்யாவின் அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்ததாக மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. இதனை அடுத்து சூர்யாவின் அலுவலகம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது என்பதும் அது சோதனைக்கு பின்னர் அது வெறும் புரளி என்பது தெரியவந்தது

இந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு இருந்தபோது அவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்த புவனேஷ் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் என்பது தெரியவந்தது

அதுமட்டுமின்றி இவர் ஏற்கனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நடிகர்கள் ரஜினிகாந்த், நடிகர் விஜய் உள்பட பலரது வீடுகளில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் சிக்கியவர் என்பதும் தெரியவந்தது 

மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரையும் அவரது பெற்றோரையும் கடுமையாக எச்சரித்த போலீசார் தற்போது மீண்டும் அவர் வெடிகுண்டு மிரட்டல் வழக்கில் சிக்கி இருப்பதாக கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web