வேளாண் துறையை கவனிக்கும் புதிய அமைச்சர் யார்? பரபரப்பு தகவல்

 

சமீபத்தில் வேளாண்துறை அமைச்சராக இருந்த துரைக்கண்ணு அவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக காலமானார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவர் வகித்து வந்த வேளாண்மைத் துறையை தற்போது தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகனுக்கு கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 

அமைச்சர் துரைக்கண்ணு வசமிருந்த வேளாண்துறை யாருக்கு ஒதுக்கப்படும் என கடந்த இரண்டு நாட்களாக பரிசீலனை செய்து நடந்து வந்ததும் வந்ததாகவும் டெல்டா பகுதியை சேர்ந்த ஒருவருக்கு தான் அந்த பதவி வழங்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் திடீரென உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்களுக்கு கூடுதலாக வேளாண்மை துறை ஒதுக்கப்பட்ட இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் அதிமுக வட்டாரத்தில் அதிருப்தி ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது 

அதிமுகவின் கோட்டையாக இருந்துவ் அரும் டெல்டா பகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட துரைக்கண்ணு வகித்த பதவியை அதே பகுதியில் உள்ள வேறொருவருக்கு கொடுத்திருக்கலாம் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன 

மேலும் வேளாண்மைத்துறை தனக்கு ஒதுக்கவில்லை என்ற ஆதங்கத்தில் அமைச்சர் சிவி சண்முகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அமைச்சர்கள் மத்தியில் ஆதங்கம் ஏற்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web